Monday, May 18, 2020

வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்

வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்
மீண்டும் வாங்க கை கொடுக்காத
என் வாணிபம்
பிள்ளைகளின் மழலை மொழிகளை
வலையொலி வாயிலாக கேட்கிறேன்
இல்லை இனி வழியென்று
தொலைவாக நானே வந்தேன்
களிப்புகளை தொலைத்து
பாச கவனிப்புகளை கலைத்து
பாலை நகர்களில் உழைத்து
ஊதியம் இழைக்க நான் வந்தேன்
வாய்க்கு ருசி தாய்க்கறி
மன மகிழ் மனைவியின் தலைக்கறி
இனம் புரியா மகள் மகன் ஆனந்தம்
என அத்தனையும் இழந்து தான் பறந்து வந்தேன்
கிழக்கே கடலலை அடிக்க
மேற்கே வயல் காற்றடிக்க
எத்தனை சந்தோசம் தந்த
பாலமுனை விட்டு தான் இப்பாலைவனம் வந்தேன்
கண்குளிர் நிறங்கள்
காணவே மரங்கள்
மாரியின் மழை பெய்யும்
இலங்கையை விட்டு பாஸ்போர்ட்
இலக்கத்தோடு தான் வந்தேன்.
இறைவா வழிகளை நேராக்கிடு
என் வலிகளை சீராக்கிடு
ஜமால்தீன் முஹம்மது முஜீப்
பாலமுனை
அன்னைக்கு ஓர் நாள் போதுமா


அன்னைக்கு ஓர் நாள் போதுமா
அவள் அன்புக்கு இங்கே
நிகர் ஒன்று உண்டா?
எந்நாளும் அன்னையர் தினமே.
முகப்புத்தகத்தை மூடிவிட்டு
மனங்களில் மலர் தூவி
அவள் முகத்தினில் காட்டுவோம்
தாரம் வந்தபின்
தாய் பாரமாய்ப் போவதோ?
மெய் காயப்பட்டு பெற்றவள்
மனதைக் காயப்படுத்தலாமா?
ஆதாயம் தேடும் உலகில்
அவள் ஆகாயமே நாம்
செல்லுமிடமெல்லாம்
கண்ணுள் மணியாய் அவளுக்கு நாம்
....அன்னை என்னுள் நான் மண்ணுள் புகும் வரை....
Dua